என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பா இரஞ்சித்
நீங்கள் தேடியது "பா இரஞ்சித்"
பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தை அழைத்து அவரை நெகிழ வைத்திருக்கிறார். #PaRanjith #AnuragKashyap
பாலிவுட் திரைப்பட உலகின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். பல புதிய முயற்சிகளின் மூலம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிற முனைப்பில் இருக்கும் அவர், பாலிவுட்டில் அறிமுகம் ஆக இருக்கிற தமிழ் இயக்குனர் பா.இரஞ்சித்தை சந்தித்து பேசியிருக்கிறார்.
சமீபத்தில் 'காலா' 'பரியேறும் பெருமாள்' படங்களை பார்த்த இயக்குனர் அனுராக், இயக்குனர் இரஞ்சித்தை
வரச் சொல்லி விருந்தளித்திருக்கிறார்.
இந்த சந்திப்பில் இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "காலா" திரைப்படம் குறித்து சிலாகித்து பேசியிருக்கிறார். அந்த படத்தின் அரசியல், தொழிற்நுட்ப நேர்த்தி ஆகியவை குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார். மேலும் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் படம் குறித்து பேசியவர்,
"இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாக பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்றும் தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார் அனுராக் காஷ்யப்.
இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் பா.இரஞ்சித், "உண்மையிலேயே அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. காலா, பரியேறும் பெருமாள் குறித்து அவர் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கூடிய விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம்’ என்றார்.
பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் பிரான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. #PariyerumPerumal
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில்
பரியேறும் பெருமாள் படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகும் வெளிநாடுகளில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.
பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் திரைப்பட திருவிழாவில் திரையிடப்படுகிறது.
புதிய படங்கள் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே இந்த விழாவில் படங்கள் திரையிடுவது வழக்கம். ஆனால் பரியேறும் பெருமாள் படம் வெளியாகி பல மாதங்களுக்குப்பிறகு இவ்விழாவில் திரையிடப்படுவது மகிழ்ச்சியை தருகிறது என்கிறார் இயக்குனர் மாரிசெல்வராஜ்.
தினேஷ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு திரைப்படம் திட்டமிட்டதை விட சீக்கிரமே முடிந்திருக்கிறது. #Irandaam_Ulagaporin_Kadaisi_Gundu
"பரியேறும் பெருமாள்" திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து "நீலம் புரொடக்ஷன்ஸ்" சார்பில் இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்து வரும் திரைப்படம் "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு".
நடிகர் தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, லிஜீஷ், மாரிமுத்து ஆகியோர் நடிக்கும் இத்திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்குகிறார்.
சென்னை, திண்டிவனம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடந்து வந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. இரண்டு கட்டமாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவடைந்ததை ஒட்டி படக்குழுவினர் உற்சாகமான கொண்டாட்டத்துடன் நிறைவு செய்தனர்.
"திட்டமிட்டதை விட சீக்கிரமே படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். அனைவரும் முழு நிறைவாக வேலை செய்திருக்கிறோம். விரைவில் எடிட்டிங், டப்பிங் பணிகள் தொடங்க இருக்கிறது. நிச்சயம் தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலாக இந்தப்படம் இருக்கும்" என்று கூறினார் இயக்குநர் அதியன் ஆதிரை.
பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். #PollachiRapists
பொள்ளாச்சியைச் சேர்ந்த பாலியல் மாபியா கும்பலின் செய்தியறிந்து நாடே உறைந்து போய் கிடக்கிறது. 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை துன்புறுத்தி வேட்டையாடி வந்த அந்த கயவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென தமிழகம் முழுவதில் இருந்தும் போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
மாதர் சங்கங்களும், முற்போக்கு இயக்கங்களும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன. இந்நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பதிவு செய்திருக்கும் ட்விட்டிலிருப்பதாவது,
"பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்க சொல்லும் நம் அனைவருக்கும்... நம் பாவம், பரிதவிப்பால், பிரச்சினை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை.
பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்க சொல்லும் நம் அனைவருக்கும்....நம் பாவம், பரிதவிப்பால், பிரச்சினை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை.
— pa.ranjith (@beemji) March 12, 2019
இல்லையேல் பாதிக்கப்பட்ட, பாதிக்கபடபோகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அதிகாரம் விழுங்கி கொண்டுதான் இருக்கும். நாமும் கேட்டு, பார்த்து, குரல் கொடுத்து அல்லது எதுவும் செய்யாமல் கடந்து போய் கொண்டுதான் இருக்க போகிறோம்.
ஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூக செயல்பாடு, கலாச்சாரம் பற்றிய பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய ஒவ்வொருவரும் முன் வரவேண்டும்." என்று கூறியிருக்கிறார்.
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கமாண்டோ படை வீரர்கள் சுற்றி வளைத்திருக்கிறார்கள். #Dinesh #Gundu
நடிகர் தினேஷ் நடிக்கும் "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான்விஜய், ஜானிஹரி, வினோத் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். நீலம் புரொடக்சன் சார்பில் பா.இரஞ்சித் தயாரிக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளை சண்டைப்பயிற்சியாளர் சாம், மற்றும் இயக்குனர் அதியன் ஆதிரை சென்னை புற நகர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் எடுத்துகொண்டிருந்தனர்.
நாயகன் தினேஷ், வேகமாக செல்லும் லாரியில் தொங்கிக்கொண்டு சண்டைபோடும் காட்சியை படக்குழுவினர் படமாக்கிக் கொண்டிருந்தனர். கேமரா லாரிக்குள் இருந்ததால் ரோட்டில் செல்வோருக்கு நிஜமாக ஏதோ லாரியில் நடக்கிறது என்பது போன்ற தோற்றத்தை கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் அந்த வழியே வந்த ஸ்பெஷல் கமாண்டோ படை வீரர்கள் நிஜமாகவே லாரியில் இரவு நேரத்தில் ஏதோ நடக்கிறது என்று லாரியை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
இதை அறிந்திராத தினேஷ், 'நமக்குத்தெரியாமல் இது என்ன புதுசா கமாண்டோ வீரர்கள் எல்லாம் சீன்ல வராங்களே' இது சீன்லயே இல்லையே என்று அதிர்ச்சியடையாமல் சுற்றி வளைத்த போலீசார் வைத்திருந்த துப்பாக்கிகளை பார்த்து இது என்ன ஒரிஜினல் மாதிரியே இருக்கு? என்று கேட்க.... நிஜ போலீசார் துப்பாக்கியை தினேஷ் மீது குறிவைக்க, இயக்குனர் சூட்டிங், சூட்டிங், என்று சத்தம்போட அதற்குபிறகே தினேஷ் அதிர்சியடைந்திருக்கிறார். நெருங்கி வந்த வீரர்கள் தினேஷ் முகத்தை கவனித்தபிறகே நிஜமான சூட்டிங் என்று உறுதிபடுத்தியுள்ளனர்.
பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த ரஜினி, பல இடங்களில் சிலிர்த்து விட்டேன் என்று பாராட்டி இருக்கிறார். #Rajini #PariyerumPerumal
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர், கயல் ஆனந்தி, கராத்தே வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
திரைத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள், விமர்சகர்கள், ஊடகங்கள் ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை ரஜினிகாந்த் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் இரஞ்சித்திடமும், இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
மேலும், ‘ஒரு நாவலைப்போல திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். பல இடங்களில் நான் சிலிர்த்துவிட்டேன். மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என்று தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னையில், தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சினிமா இயக்குனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பொது மக்களின் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதற்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் இயக்குனர்கள் பா.இரஞ்சித், பாலாஜி சக்திவேல், ராஜீவ் முருகன், சீனுராமசாமி, சசி, ராம், நவீன் குமாரசாமி, எஸ்.பி.ஜனநாதன், பாண்டிராஜ், நவீன், கமல் கண்ணன் ஆகியோரும், நடிகர் அரவிந்த் ஆகாஷ், பாடலாசிரியர் உமாதேவி, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் துப்பாக்கி சூட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தை அடுத்து, தனுஷை வைத்து படம் பா.இரஞ்சித் படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #PaRanjith #Dhanush
கபாலி முடிந்த பிறகு மீண்டும் இரஞ்சித் ரஜினியை இயக்குவாரா? என்று சலசலப்பு எழுந்தது. ஆனால் உடனே ரஜினி - இரஞ்சித் கூட்டணி அமையக் தனுஷ் தான் காரணமாக இருந்திருக்கிறார். தனுஷ் தான் கதையை கேட்டு ரஜினியிடம் அனுப்பியதோடு தாமே தயாரிக்க முன்வந்தார்.
இரஞ்சித்தின் இயக்கமும் ஒருங்கிணைப்பும் பிடித்து போனதால் தனக்கும் ஒரு கதை தயார் செய்யுமாறு கேட்டிருக்கிறாராம். இரஞ்சித்துக்காக நீண்ட காலமாக சூர்யாவும் காத்திருக்கிறார்.
அடுத்தடுத்து ரஜினி படம் இயக்கியதால் சூர்யாவை காத்திருக்க வைத்திருந்தார் இரஞ்சித். எனவே அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கிவிட்டு பின்னர் தனுசை வைத்து இயக்கலாம். காலா வெளியீட்டிற்கு பின்னர் தான் இது உறுதிபடுத்தப்படும்.
அனேகமாக இரஞ்சித் தனுஷ் இணையும் படமும் அரசியல் படமாகவே இருக்கலாம். தனுஷ் ஏற்கனவே கொடி என்ற அரசியல் படத்தில் நடித்தாலும் சமூகம் சார்ந்த படங்களில் அதிகம் நடித்ததில்லை. எனவே இரஞ்சித்திடம் அவர் பாணியிலேயே கதை தயார் செய்ய சொல்லியிருக்கிறாராம்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். #PaRanjith #PariyerumPerumal
பா.இரஞ்சித் இயக்கிய ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ஆகிய படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இவர்கள் கூட்டணியில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘காலா’ படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதுதவிர, பா.இரஞ்சித் தயாரித்து வரும் ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் இடம் பெறும் ‘கருப்பி...’ பாடலை வெளியிட்டார்கள். இந்தப் பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்தது. தற்போது இரண்டாவது பாடலான ‘எங்கும் புகழ் துவங்க...’ என்ற பாடலை மே 18ம் தேதி வெளியிட இருக்கிறார்கள். இதனை பா.இரஞ்சித், சந்தோஷ் நாராயணனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இயக்குனர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்சன்ஸ் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை தயாரித்து வருகிறது. இயக்குனர் ராமின் இணை இயக்குனரான மாரிசெல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இதில் கதிர் நாயகனாகவும், கயல் ஆனந்தி நாயகியாகவும், யோகிபாபு, லிஜீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X